Wednesday, 29 April 2015

கருப்பு பணம் பதுக்கலில் 'ஏழை நாடான' 
இந்தியாவுக்கு 16வது இடமாம்!

                  டெல்லி: ஸ்விஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கியதில் 'ஏழை நாடான' இந்தியாவுக்கு 16 வது இடம் கிடைத்துள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது. ஸ்விஸ் வங்கியில் பணம் பதுங்கிய 628 இந்தியர்கள் பெயர்கள் ஏற்கனவே லீக் ஆகியிருந்த நிலையில், மொத்தமுள்ள 1195 இந்தியர்கள் பெயரும் இன்று லீக் ஆகியது. மொத்தம் 200 நாடுகளை சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்தில், கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள நிலையில், இவர்கள் பதுக்கியுள்ள பண மதிப்பின் அடிப்படையில், கருப்பு பண சேமிப்பில் இந்தியாவுக்கு 16வது இடம் கிடைத்துள்ளது. Black money: Indians rank 16th on leaked HSBC list; Swiss on top கருப்பு பணம் வைத்துள்ளோருக்கான முதலிடத்தை சுவிட்சர்லாந்துதான் பெற்றுள்ளது. அந்த நாட்டை சேர்ந்தவர்கள் 31.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு கருப்பு பணத்தை பதுக்கியுள்ளனர். 2வது இடம் ஒருங்கிணைந்த ஐரோப்பாவுக்கு. 21.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு அந்த நாட்டவர்கள் கருப்பு பணம் பதுக்கியுள்ளனர். இந்த பட்டியலில் வெனிசுலா 14.8 பில்லியன் டாலர் பணத்துடன் 3வது இடத்திலுள்ளது. 13.4 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா நான்காவது இடத்திலும், 12.5 பில்லியன் டாலர்களுடன் பிரான்ஸ் 5வது இடத்திலும் உள்ளது. 4.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பணத்துடன் இந்தியா இந்த பட்டியலில் 16வது இடத்திலுள்ளது. மொத்தம் 1195 இந்தியர்கள், 1668 அக்கவுண்டுகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சில இந்தியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்டுகளை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment